பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை – குளிக்கும் இடங்களில் கழிவு நீர் வெளியேற்றம்
ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வரும் வெப்ப அலைக்கு மத்தியில் பிரத்தானியாவில் நீர் விநியோகிக்கும் சில நிறுவனங்கள் கழிவு நீரை மக்கள் குளிக்க பயன்படுத்தும் நீர் நிரம்பிய இடங்களில் வெளியேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் சில நீர்நிலைகளில் 2,856 மணிநேர கழிவுநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 99 மணிநேர கழிவுநீர், குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளைப் பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச கழிவுநீர் வெளியேற்றத்திற்கு தேம்ஸ் வாட்டர் நிறுவனமே காரணமாக இருந்ததாகவும், அந்நிறுவனம் 377 மணிநேரம் கழிவுகளை வெளியேற்றியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே […]







