ஆப்கானிஸ்தான் வெடி விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு
ஆப்கானிஸ்தானில் பாடசாலைக்கு அருகே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்னதாக 06 மாணவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதுஅந்த எண்ணிக்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த விபத்தில் 10 மாணவர்கள் உயிரிழந்ததுடன், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தின் தலைநகரான அசாதாபாத்தின் அந்தர் ஜைர் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
ஆப்கானிஸ்தானில் பாடசாலைக்கு அருகே வெடிப்புச் சம்பவம் – 6 மாணவர்கள் பலி, 97 பேர் காயம்




