காலநிலை மாற்றம் காரணமாக இந்த கோடைக்காலப் பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய பாலைவனமான சின்ஜியாங்கின் தக்லமக்கானில் (Taklamakan) இந்த ஆண்டின் முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2021 முதல் தக்லமக்கான் பாலைவனத்தில் இதேபோன்ற வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டிருந்தாலும், அவை பொதுவாக வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்கின்றன. ஆனால் இம்முறை முன்கூட்டியே ஏற்பட்டுள்ளன. ரொய்ட்டர்ஸ் காலநிலை கண்காணிப்பு அறிக்கையின்படி, ஜூன் 12 அன்று, […]