உலகம்

டியாகோ கார்சியா தீவை குத்தகைக்கு எடுக்கும் இங்கிலாந்தின் திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு!

சாகோஸ் (Chagos) தீவுகளை மொரீஷியஸிடம் (Mauritius) ஒப்படைத்து, ஒரு முக்கியமான இராணுவ தளத்தை மீண்டும் குத்தகைக்கு எடுக்கும் இங்கிலாந்தின் திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கம் அதிகாரப்பூர்வ ஆதரவை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவ தளத்தை  “தொடர்ந்து பயன்படுத்த அமெரிக்கா தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இராணுவத் தளத்தில் தொடர்வது “அமெரிக்க தேசிய பாதுகாப்பை மேம்படுத்தும்” மற்றும் “இந்தியப் பெருங்கடல் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை” உறுதி செய்யும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டியாகோ கார்சியா தீவுக்கூட்டம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகளால் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் புதிய திட்டத்தின் கீழ், இங்கிலாந்து அரசாங்கம் அந்த தீவை  99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுப்பதாக  அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்