ஐரோப்பா

சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலனை!

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பிரதேசத்தை மொரிஷியஸுக்கு வழங்க பிரித்தானியா திட்டமிட்டிருந்த நிலையில் சட்ட சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக்கொள்ள ட்ரம்ப் நிர்வாகம்  திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த டியாகோ கார்சியா இராணுவத் தளத்தை உள்ளடக்கிய இந்தத் தீவுகளை வாங்கும் யோசனையை, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) ட்ரம்பிடம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டீகோ கார்சியாவின் தவிர்க்க முடியாத இராணுவ முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை ஐக்கிய இராச்சியம் கைவிடுவது மாபெரும் முட்டாள் தனம் என ட்ரம்ப் முன்னதாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்