சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலனை!
கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், சாகோஸ் தீவுகளை வாங்குவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பிரதேசத்தை மொரிஷியஸுக்கு வழங்க பிரித்தானியா திட்டமிட்டிருந்த நிலையில் சட்ட சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக்கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த டியாகோ கார்சியா இராணுவத் தளத்தை உள்ளடக்கிய இந்தத் தீவுகளை வாங்கும் யோசனையை, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) […]




