மே தினக் கொண்டாடத்திற்கான ஐ.ம.ச வின் அழைப்பை மறுத்த ஐ.தே.க
மே தினக் கொண்டாடத்தில் தங்கள் கட்சியுடன் இணையுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துக்கோரள கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இம்முறை மே தினம் மே முதலாம் திகதி பௌர்ணமி தினத்தில் வருவதால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அதனை மத வழிபாடுகளுக்காக ஒதுக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மே முதலாம் திகதி பௌர்ணமி தினமாக அமையும் பட்சத்தில், […]





