மட்டக்களப்பில் பெண்ணொருவர் அடித்துக் கொலை
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்சேனை பகுதியில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் 24 வயதுடைய காளிராசா மனோஜினி என்பவரே உயிரிழந்தாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாகவே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பல தடவைகள் இத்தம்பதியினருக்கு இடையில் குடும்பத் தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




