உலகம்

வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருக்கைக்காக சண்டையிட்ட இரு பயணிகள்…

தைவானில் இருந்து கலிபோர்னியா சென்ற விமானத்தில் இருக்கைக்காக இரண்டு பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ விமானத்தில் இருக்கைக்காக இரண்டு பயணிகள் சண்டை போட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர், தனது செல்போனில் படம் எடுத்து இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தார். இதனால், அவர் அருகே அமர்ந்திருந்த பயணி, காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார். இதனால். இருமிய பயணி, எழுந்து சென்ற பயணி இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட மோதல்

அவர்களின் சண்டையை விலக்கி விட விமான ஊழியர்கள் போராடினர். அதற்காக பயணிகள் இருவரையும் பிடித்து சண்டையை நிறுத்த எவ்வளவோ முயன்றனர். மறுபுறம், இருவருக்கும் இடையே நடந்த சண்டையைப் பார்த்து மற்ற பயணிகள் பீதியடைந்து அலறுவதை வீடியோவில் காணலாம். இறுதியாக, இருவரையும் சமாதானம் செய்து ஊழியர்கள் சோர்வடைந்தனர். விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் இருவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content