பிரான்ஸில் ரயில் தடம் புரண்டு விபத்து – 44 பேர் காயம்
பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் உள்ள ரூவன் (Rouen) மற்றும் கேன் (Caen) நகரங்களுக்கு இடையே ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 44 பேர் காயமடைந்ததாக பிரெஞ்சு அதிகாரிகளும் ரயில்வே நிர்வாகமும் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் நிர்வாகத் தலைவரான ஜீன்-பெனாய்ட் ஆல்பர்டினி Jean-Benoit Albertini தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத ஒரு பொருளின் மீது மோதியதாலேயே ரயில் தடம் புரண்டதாக பிரெஞ்சு காவல் துறை […]






