ஸ்பெயினில் ரயில் ஓட்டுனர்கள் பணிப்புறக்கணிப்பு – பயணிகள் அவதி
ஸ்பெயினில் ரயில் ஓட்டுனர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற ரயில் விபத்தை தொடர்ந்து பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான முதலீடுகளை அதிகரிக்கக் கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய நீண்ட மற்றும் நடுத்தர தூர ரயில் சேவைகளில் சுமார் 40 சதவீதமானவை இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4,042 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மேலும், தலைநகர் மாட்ரிட்டின் புறநகர் ரயில் சேவைகளில் 90 சதவீதமும், பார்சிலோனாவின் உள்ளூர் ரயில் சேவைகளில் 50 சதவீதமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டு மாட்ரிட்-செவில் Madrid-Seville இடையிலான அதிவேக ரயில் பாதையில் நிகழ்ந்த இரண்டு விபத்துகளில் 115 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புயென்டே Oscar Puente பதவி விலகினார்.
இதையடுத்து, அந்த அமைச்சகத்தை தற்காலிகமாகக் கவனித்துக்கொள்ள, தனது துணை அதிகாரியான கார்லோஸ் குயெர்போவை பிரதமர் பெட்ரோ சான்செஸ் நியமித்திருந்தார்.




