ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் திருட வந்த இடத்தில் யோகா செய்த கொள்ளைக்காரி!!

கொள்ளையடிக்க செல்லும் இடத்தில் திருடர்கள் தூங்கியதால் சிக்கிக் கொண்டது, சாமி கும்பிட்டுவிட்டு கைவரிசை காட்டுவது போன்ற சம்பவங்களை கேள்விபட்டிருக்கிறோம்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் பேக்கரி ஒன்றில் திருடுவதற்காக சென்ற இளம்பெண் ஒருவர் கைவரிசை காட்டுவதற்கு முன்பாக பேக்கரி முன்பு யோகாசனம் செய்துள்ளார்.இதுதொடர்பான வீடியோக்கள் அங்கிருந்த CCTV காட்சியில் பதிவாகி உள்ளது. ‘மிஷன் இம்பாசிபிள்- கோஸ்ட் புரொடோகால்’ ஒலிப்பதிவின் பின்னணி இசையுடன் கூடிய அந்த வீடியோவில் பெண் ஒருவர் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு யோகாசனம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கடந்த 3ம் திகதி நடைபெற்றுள்ளது. யோகாசனம் செய்த பிறகு அந்த பெண் பேக்கரிக்குள் நைசாக நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுள்ளார். இதற்கிடையே CCTV காட்சிகள் மூலம் பொலிஸார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித