வீட்டில் Chill பண்ணும் தளபதி விஜய் – வீடியோ செம வைரல்
தளபதி விஜய் வெளிநாட்டில் நடந்த தனது 68வது பட பணிகளை முடித்துவிட்டு அண்மையில் சென்னை திரும்பினார். இந்நிலையில் அவரது வீட்டு தோட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது.
லியோ பட வெற்றி விழாவை முடித்து நேரடியாக தாய்லாந்து சென்ற தளபதி விஜய், சில தினங்களுக்கு முன்பு தனது படபிடிப்பு பணிகளை தாய்லாந்தில் முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில் தளபதி விஜய் தனது வீட்டில் தன்னுடைய செல்ல பிராணிக்கு உணவு வழங்கும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
பொதுவெளியில் மட்டுமல்லாமல் தனது வீட்டுக்குள்ளும் மிகவும் கூலாக தனது செல்ல பிராணி வீராவோடு நேரத்தை செலவிட்டு கொண்டு தனது வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் விஜய் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
(Visited 5 times, 1 visits today)