ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் – 28 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் இரண்டு மாகாணங்களை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஏறக்குறைய 03 மாதங்கள் அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தலிபான்களால் நடத்தப்படும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “இந்த ஆக்கிரமிப்புக்கு […]




