ஸ்பெயினில் வீட்டுவசதி நெருக்கடிக்கு தீர்வுக்கோரி மக்கள் போராட்டம்
ஸ்பெயினில் வீட்டுவசதி நெருக்கடிக்கு தீர்வுக்காணுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்வைத்த வீட்டுவசதி தொடர்பான நடவடிக்கைகள் எதிர்க்கட்சியால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். இதன்போது பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பதாகைகளையும் போராட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர். அரசியல் கட்சிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப மக்கள்தான் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக்கொள்வதில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. நிலைமை இப்படியே தொடர […]




