பொழுதுபோக்கு

காதலர் விஜய் வர்மாவுக்காக தமன்னா செய்த அர்ப்பணிப்பு

இந்தியாவில் தயாராகி ‘நெட்ஃபிளிக்ஸில் அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்த இந்தி ஆந்தாலஜி படம் ‘லஸ்ட் ஸ்டோரீஸ். கொரோனா பெருந்தொற்றுக்கு முன் இந்தியப் பார்வையாளர்களை வைரஸாகத் தொற்றியது இந்தப் படம். ஓடிடியில் இன்றைக்கும் இந்தப் படம் பிரபலமாக இருக்கிறது.

இதுவரை உலக அளவில் இந்த ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ படத்தை 8 கோடி பேர் பார்த்திருக்கிறார் என்கிறது நெட்ஃபிளிக்ஸ். அனுராக் காஷ்யப் இயக்கிய படம் இது. இத்தனை ஹிட் அடித்த ஒரு ஆந்தாலஜியை மீண்டும் பிராண்ட் செய்து பணம் பார்க்க விரும்பிய நெட்ஃபிளிக்ஸ். ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ இயக்கும் பொறுப்பை இயக்குநர் பால்கியிடம் கொடுத்தது.

2018-ல் வெளிவந்த ஆந்தாலஜியில் இடம்பெற்ற 4 கதைகளில் 2 கதைகளில் ராதிகா ஆப்தேவும் கீரா அத்வானியும் போட்டிபோட்டு பாலியல் காட்சிகளில் தாராளம் காட்டி இருந்தார்கள். இலைமறை காயாக இருந்தபோதும் ரசிகர்களை சுண்டி இழுத்தது. முதல் பாகம் வெளியான பிறகு கீரா அத்வானி பாலிவுட்டில் மேலும் பிஸியானார்.முதல் பாகத்தில் இரண்டு கதாநாயகிகள் உருவாக்கிய தாக்கத்தை இரண்டாம் பாகத்தில் தமன்னா ஒருவரே ஈடுசெய்துவிட்டார். மிருனாள் தாக்கூர். காஜோல், கொங்கனா சென் ஆகியோர் இருந்தாலும் தமன்னா நடித்திருந்த ‘செக்ஸ் வித் எக்ஸ்’ அத்தியாயம் தான் உலக அளவிலும் டிரெண்ட் ஆனது. அதற்கு முக்கிய காரணம், தமன்னாவின் கிரங்கவைத்த நடிப்பு.

தமன்னா

‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ இன்னும் பிய்த்துக்கொண்டு போனதற்கு, இதில் தமன்னாவின் முன்னாள் கணவராக நடித்த விஜய் வர்மா என்கிற புதுமுக நடிகரே நிஜவாழ்விலும் அவரது காதலராக மாறியதுதான்.தமன்னாவும் விஜய் வர்மாவும் இந்தப் படத்தின் பாலியல் காட்சிகளில் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தனர். படப்பிடிப்பு முடிந்தபிறகு இருவரும் காதலைப் பரிமாறிக்கொண்டனர். நீண்ட நாளாக இதை மறைத்த தமன்னா, பின்னர் விஜய் வர்மா உடனான தனது காதலை ஒப்புக்கொண்டார்.

தமன்னா

தமன்னாவின் அர்பணிப்பைத் தற்போது நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். கே.ஜி.எஃப்-பில் போட்ட ஆட்டம், சமீபத்தில் ரஜினியின் ஜெயிலரில் போட்ட ஆட்டம் எல்லாம் வைரலானாலும் அவற்றில் எல்லாம் தமன்னாவின் அதீதமான உடல் எடை பெரிதும் ட்ரோலுக்கு உள்ளானது.

இந்நிலையில், தனது காதலர் விஜய் வர்மா கேட்டுக்கொண்டதற்காக தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார் தமன்னா. தற்போது காதலருக்காக 7 கிலோ எடையைக் குறைத்து எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் படங்களை ரசிகர்களுக்குப் பகிர்ந்திருக்கிறார் அவர். காதலருக்கான தமன்னாவின் அர்பணிப்புக்கு ரசிகர்களும் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content