வொஷிங்டனின் உயர்நிலை பாடசாலையில் கத்திகுத்து தாக்குதல்!
வொஷிங்டனின் டகோமாவில் (Tacoma) உள்ள ஃபாஸ் ( Foss) உயர்நிலைப் பாடசாலையில் நேற்று கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள், ஒரு வயதுவந்த பாதுகாவலர் மற்றும் சந்தேக நபர் உட்பட 06 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரியும் மேற்படி சம்பவத்தில் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்றைய தினம் பாடசாலை நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




