மிச்சிகனை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்: 5 பேரை கொன்ற சந்தேக நபர் சடலமாக மீட்பு
வடக்கு மிச்சிகனில் வெள்ளிக்கிழமை (15) ஐந்து பேரைக் சுட்டுக்கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக மிச்சிகன் மாநிலக் காவல் துறை தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது. மிச்சிகனின் மிஸாக்கி கவுண்டியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து, காலை 11:40 மணியளவில் (1540 GMT) காவல்துறையினர் அங்கு விரைந்தனர். அங்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையிலும், நான்காவது நபர் காயமடைந்த நிலையிலும் கண்டெடுக்கப்பட்டதாக […]













