உலகம் செய்தி

‘போர் நிறுத்தம்’:அமெரிக்காவிடம் ஈரான் விடுத்துள்ள அவசர கோரிக்கை

"இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அதன் முழுமையான நோக்கம் மாறாமல் நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி"

“இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அதன் முழுமையான நோக்கம் மாறாமல் நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி” என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் (Ishaq Dar), அமெரிக்க தூதரக அதிகாரி (Chargé d’Affaires) நடாலி பேக்கரிடம் (Natalie Baker) தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான இந்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகவுள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் இஷாக் தார், இந்தச் சந்திப்பின் போது பாகிஸ்தான் – அமெரிக்க இருதரப்பு உறவுகள் மற்றும் சமீபத்திய பிராந்திய அரசியல் நிலவரங்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பாகிஸ்தான் – அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் பாராட்டுக்குரியவை. நிலையான அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தையும் தூதரக அணுகுமுறையுமே மிக முக்கியம்” என்று துணைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் பாகிஸ்தானின் ஆக்கபூர்வமான பங்களிப்பை அமெரிக்க அதிகாரி நடாலி பேக்கர் பாராட்டியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி