ஆஸ்திரேலியாவில் விசா கட்டுப்பாடுகள் தீவிரம்: புதிய திட்டம் அமுல்
ஆஸ்திரேலியாவில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாட்டிலிருந்து கட்டாயமாக வெளியேற்றுவதற்காக புதிய அமுலாக்க நடவடிக்கைகளை லேபர் அரசு அறிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச மாணவர்கள் காலவரையறையின்றி தங்குவதை தடுக்கும் வகையிலும் விசா விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த புலம்பெயர்வு விதிகளின் மாற்றங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) இன்று வெளியிட்டார். இதற்கமைய நிகர வெளிநாட்டு புலம்பெயர்வை (NOM) நடப்பு நிதியாண்டில் 2 லட்சத்து 45 ஆயிரமாகவும் , 2027-28 […]













