உலகம்

மயோன் எரிமலை வெடித்து சிதறியது – 3000 மீற்றர் உயரத்திற்கு எழுந்த சாம்பல் புகை

  • October 31, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலை நேற்று முதல் வெடிக்க ஆரம்பித்துள்ளது. சாம்பல் புகை   3,000 மீற்றர் உயரத்திற்கு எழுந்ததாகவும் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயோன் எரிமலையைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் மாநகரங்களில் உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக  எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை. இருப்பினும் எச்சரிக்கை அளவு  0-5 அளவுகோலில் 2-லிருந்து 3-ஆக உயர்த்தியுள்ளதுடன், எரிமலைப் பள்ளத்திலிருந்து 6 கிலோ மீற்றர் சுற்றளவுக்குள் இருக்கும் மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

உலகம்

குவாத்தமாலாவில் வெடிக்கும் தருவாயில் எரிமலை- ஆரஞ்சு எச்சரிக்கை

  • August 4, 2026
  • 0 Comments

குவாத்தமாலாவில் (Guatemalan) ஃபியூகோ (Fuego) எரிமலை சாம்பலை கக்கி வருகின்ற நிலையில், அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சான் ஜுவான் அலோட்டெனாங்கோ (San Juan Alotenango) நகராட்சியில் உள்ள எல் போர்வெனீர் ( El Porvenir) மற்றும் லாஸ் லஜிடாஸ் ( Las Lajitas) ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எரிமலைச் செயல்பாடு தீவிரமடைந்தால், இந்த ஓட்டங்கள் மேலும் விரிவடையும்  என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் எரிமலைக்கு மேற்கு […]