உலகம்

கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல் – நால்வர் பலி

  • September 20, 2026
  • 0 Comments

கரீபியன் கடற்பகுதிகளில் பயணித்த கப்பல்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘மேற்கு அரைக்கோள கூட்டுப் பணிக்குழு’ (Joint Task Force Western Hemisphere) இந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பில் ‘தெற்குப் படைப்பிரிவு’ (SOUTHCOM) வெளியிட்டுள்ள செய்தியில், இத்தாக்குதல் தங்கள் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டதாகவும், அப்படகானது போதைப்பொருள் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது என்பது உளவுத்துறை தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.  

உலகம்

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் – 14 பேர் உயிரிழப்பு

  • July 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் சுகாதார அமைச்சகம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதலில்  78 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று முன்தினம் ஈரானின் 80 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து நேற்று இரவு 90 இலக்குகளை அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

உலகம்

ஈரான் மீது அமெரிக்கா மீளவும் தாக்குதல்

  • June 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் பனாமா கொடி ஏற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள பல இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஈரானின் இராணுவக் கண்காணிப்பு அமைப்புகள், தகவல் தொடர்பு மையங்கள், வான் பாதுகாப்புத் தளங்கள், ஆளில்லா விமானச் சேமிப்புத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்கும் திறன்கள் தொடர்பான இலக்குகளைத் தாக்கியதாக […]