பரப்புரை காரில் மணமக்கள்! விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது காரில் மணமக்களை நேரில் அழைத்து வாழ்த்திய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அப்போது, அந்த வழியாக வந்த மணமக்கள் இருவரைத் தனது பரப்புரை வாகனத்திற்குள்ளேயே அழைத்து வாழ்த்தியுள்ளார்.
வழக்கமாகத் தலைவர்கள் தங்களது வாகனத்தின் மேலிருந்தே வாழ்த்துத் தெரிவிக்கும் நிலையில், பாதுகாப்பு வளையங்களையும் கடந்து திருமணப்பரிசாக மணமக்களை அருகில் அழைத்து விஜய் உரையாடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சமூக வலைதளங்களில் இந்த காணொளி வைரலாகி வாழ்த்துகளை பெற்று வருகின்றது.





