இந்தியா செய்தி தமிழ்நாடு

த.வெ.க. தொண்டர்கள் கொண்டாட்டம்! சொந்த தொகுதியில் ஸ்டாலின் திண்டாட்டம்!!

தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் மற்றும் விஜய்யின் வீட்டுக்கு முன்னால் ஆதரவாளர்கள் திரண்டு, வெற்றிக் கோஷம் எழுப்பிவருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

அக்கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தைபெறும் என கட்சி தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. 65 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

அக்கட்சி பெரும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கின்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவே தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றார்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் 10 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை த.வெ.க. பெற்றுள்ளது. இதன்மூலம் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி என்ற அந்தஸ்த்தை முதல் தேர்தலிலேயே அக்கட்சி பெற்றுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!