இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து பிரிட்டன் துணை பிரதமர் மகிழ்ச்சி!

  • February 17, 2026
  • 0 Comments

  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லம்மி (David Lammy) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தினார். ஜனாதிபதி அலுவகத்தில் இன்று (17) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் தற்போதைய நிலையில் விஜயம் மேற்கொண்டமைக்காகப் பிரிட்டன் துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் போது பிரிட்டன் வழங்கிய ஒத்துழைப்புகளைப் பாராட்டினார். குறிப்பாக, இலங்கையின் ஆடை […]

இலங்கை செய்தி

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த சாசனம்: முதல் தெற்காசிய நாடாக இணைகிறது இலங்கை!

  • February 17, 2026
  • 0 Comments

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை இன்று வெளிப்படுத்தியது. கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து இவ்வாறு விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரிட்டன் துணை பிரதமர் டேவிட் லம்மி கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது. இலங்கை நீண்டகாலமாக […]

அரசியல் இலங்கை செய்தி

” யாழ்.மக்களாலேயே ரணில் தோற்றார்” – ஐ.தே.க. கவலை

  • February 17, 2026
  • 0 Comments

“2005 ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு மக்கள் வாக்களிப்பை புறக்கணிக்காது இருந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றிபெற்றிருப்பார்.” – என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “2005 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே Ranil Wickremesinghe வெற்றி பெற்றிருப்பார். யாழ்ப்பாணத்தில் தேர்தலை புறக்கணிக்காமல் இருந்திருந்தால் அவர் இலகுவில் வென்றிருப்பார். அந்த தேர்தலில் தோற்ற பின்னரே ரணிலின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. ரணில் விக்கிரமசிங்க என்பவர் […]

இலங்கை செய்தி

பொருளாதார உறவை வலுப்படுத்த ஜப்பான், இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்து!

  • February 17, 2026
  • 0 Comments

“இலங்கை – ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்” (Intergovernmental Economic Policy Dialogue) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு முக்கிய மைல்கல்லாக, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு இடையே பொருளாதாரக் கொள்கை உரையாடல் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Memorandum of […]

விளையாட்டு

ஆப்கானிஸ்தானின் கனவை பறித்த நியூசிலாந்தின் வெற்றி!

  • February 17, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand மற்றும் கனடா Canada ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. T20 உலகக்கிண்ண தொடரில் 31வது லீக் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் போட்டியிட்டன. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கனடா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ஓட்டங்களை விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு கனடா அணி 173 […]

இலங்கை செய்தி

15 நாட்களுக்குள் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை!

  • February 17, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 339 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 1 முதல் 15 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 26 ஆயிரத்து 96 பேரும், பிரிட்டனில் இருந்து 17 ஆயிரத்து 807 பேரும், ரஷ்யாவில் இருந்து 12 ஆயிரத்து 607 பேரும் இலங்கைக்கு சுற்றுலா […]

பொழுதுபோக்கு

மீண்டும் வருகிறார் தொடை அழகி ரம்பா!

  • February 17, 2026
  • 0 Comments

தொடை அழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரம்பா, Rambha சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களத்துக்கு வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரம்பாவின் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் ‘அழகிய லைலா…’ பாடலில் ரம்பாவின் உடை பறக்கும் ஆட்டம் பலரின் மனங்களில் இன்னும் குடிகொண்டுள்ளது. அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரம்பாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ரம்பா, 2010-ம் ஆண்டு தொழில் அதிபர் இந்திரகுமாரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்கள், […]

இந்தியா செய்தி

புதுச்சேரியிலும் விஜய்க்கு விசில் சின்னம்!

  • February 17, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்துக்கு தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அத்துடன், புதுச்சேரி மாநிலத்திற்கான புதிய நிர்வாகக் குழுவையும் நியமித்துள்ளார். “ புதுச்சேரி மாநிலத்தில் தவெக-வின் அன்றாடப் பணிகளையும் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்க, புதியதாக 30 பேர் கொண்ட நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது. இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தவெக-வுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. […]

விளையாட்டு

சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையுமா சிம்பாப்வே? இன்று பலப்பரீட்சை!

  • February 17, 2026
  • 0 Comments

ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (17) மேலும் மூன்று முக்கியமான லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 31 ஆவது லீக் ஆட்டத்தில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி முற்பகல் 11.00 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் நியூசிலாந்துக்கு எதிராக கனடா அணி சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது. 32ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து மற்றும் சிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. […]

அரசியல் இலங்கை செய்தி

இனவாதிகளுக்கே தேசிய பாதுகாப்பு குறித்து பதற்றம்: பொன்சேகா சாட்டையடி!

  • February 17, 2026
  • 0 Comments

தேசிய பாதுகாப்பு தொடர்பில் தென்னிலங்கை அரசியல் களத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Field Marshal Sarath Fonseka நிராகரித்துள்ளார். “தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலி மாயையை தோற்றுவிப்பதற்கு கடந்த காலங்களில் இனவாதத்தை தூண்டிய தரப்புகள் முற்படுகின்றன.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “தமக்கு தேவையானவற்றை செய்துகொள்வதற்காக போலி மாயையை உருவாக்க மேற்படி தரப்பு முயற்சிக்கின்றது. முப்படையினர் மற்றும் பொலிஸார் உரிய வகையில் செயல்பட்டுவருகின்றனர். ஏதேனும் இடத்தில் குறைபாடு இருந்தால் அதனை நிவர்த்தி […]

error: Content is protected !!