உலகம் செய்தி

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா போர் தொடுக்கும்பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்துதளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் கடிதம் அனுப்பியுள்ளது. இரு தரப்பு பேச்சு தோல்வியடைந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அத்துடன், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது யுத்த விமானங்களை அதிகளவில் குவித்து வருகின்து. இந்நிலையில் ஈரான் மற்றும் ரஷ்யா இணைந்து கடற்படைப் பயிற்சிகளை மேற்கொள்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இவ்வாறானதொரு […]

விளையாட்டு

கடைசி லீக் ஆட்டம் இன்று: சாதனை வெற்றியை பதிவு செய்யுமா ஆஸி.?

  • February 20, 2026
  • 0 Comments

T20 World Cup உலகக்கிண்ண தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன. கடைசி போட்டியில் பலம்பொருந்திய ஆஸ்திரேலியா Australia அணியும், கத்துக்குட்டி Oman அணியான ஓமானும் களம் காண்கின்றன. கண்டி, பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி நடைபெறும். உலகக்கிண்ண தொடரில் இருந்து முதல் சுற்றோடு ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது. எனவே, இன்று சாதனை வெற்றியொன்றை நிலைநாட்டி ஆறுதல் பெறுவதற்கு அந்த அணி முயற்சிக்கக்கூடும். சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாகின்றது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடி இன்று சந்திப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் Anura Kumara Dissanayake , பிரதமர் நரேந்திர மோடிக்கும் Narendra Modi இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் AI Impact Conference பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றுள்ளார். இதற்கு இணையாகவே மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளார, பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் மத்தியில் NPP அரசுக்கான செல்வாக்கு அதிகரிப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெளிபடும் என்பது உறுதி என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அதிகரித்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனேயே இதனை நான் அறிவிக்கின்றேன். மாகாணசபைத் தேர்தலின்போது இது தெரியவரும். நிச்சயம் […]

இலங்கை செய்தி

“பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவு”

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்க பசுபிக் கடற்படை கட்டளை (United States Pacific Fleet) தளபதி அட்மிரல் Stephen T. Koehler, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை இன்று ( 19) சந்தித்து கலந்துரையாடினார். பாதுகாப்பு அமைச்சில் மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பசுபிக் பிராந்தியத்தில் உருவாகிவரும் பாதுகாப்பு சூழ்நிலைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. உருவெடுத்து வரும் கடல்சார் சவால்களை சமாளிப்பதற்காக நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்பதில் இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை வெளியிட்டனர். கடல்சார் துறை […]

விளையாட்டு

இறுதி ஓவர்வரை பரபரப்பு: இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே!

  • February 19, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lanka அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிம்பாப்வே Zimbabwe அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி ஓவர்வரை பரபரப்புக்கு பஞ்சம் இருக்கவில்லை. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி 178 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 179 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் 4 […]

அரசியல் இலங்கை செய்தி

“புலிகள் சரணடைவு”: பொன்சேகா வெளியிட்ட கருத்துக்கு நாமல் பதிலடி!

  • February 19, 2026
  • 0 Comments

“ நாம் தமிழ் மக்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. பொன்சேகா கூறும் விடயம் புதிய தகவல் அல்ல.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Field Marshal Sarath Fonseka கொழும்பில் நேற்று (18) விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். இறுதிப் போர் தொடர்பில் சில சர்ச்சைக்குரிய தகவல்களையும் வெளியிட்டார் இதன்போது கருத்து வெளியிட்ட சரத் […]

இலங்கை செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது!

  • February 19, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். யாழ். நெடுந்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடல் பகுதிகளில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் கடற்படையினரால் […]

விளையாட்டு

வெற்றிக் கனியை ருசித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

  • February 19, 2026
  • 0 Comments

இத்தாலி Italy அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் West Indies அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. ICC T-20 உலகக் கிண்ண தொடரின் இன்றைய ஆட்டத்தில் C பிரிவில் இடம் பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் இத்தாலி அணிகள் மோதின. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் […]

இலங்கை செய்தி

இலங்கை – தென்னாபிரிக்காவுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்!

  • February 19, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் Air Vice Marshal Sampath Thuyacontha, இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவருக்கும் Sandile Edwin Schalk இடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (19) நடைபெற்றது. இச்சுமூக சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு நலன்கள் தொடர்பான துறைகளில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய புதிய வாய்ப்புகள் குறித்தும் இருதரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பாதுகாப்பு செயலாளர், இலங்கை […]

error: Content is protected !!