செங்கடல் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் மற்றும் சர்வதேசக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியா கடும் கவலை வெளியிட்டுள்ளது.  இந்தியா செய்தி

செங்கடலில் பதற்ற நிலை: இந்தியா கடும் கவலை

  • September 18, 2026
  • 0 Comments

செங்கடல் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் மற்றும் சர்வதேசக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியா கடும் கவலை வெளியிட்டுள்ளது. பிராந்திய  பாதுகாப்பையும், சர்வதேசக் கடல்வழிப் பாதைகளில் கப்பல்கள் சுதந்திரமாகப் பயணிப்பதையும் அச்சுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வெளியுறவு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இத்தகவலை வெளியிட்டார். செங்கடல் மற்றும் அதனைச் […]

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது. இலங்கை செய்தி

வருடாந்தம் 3 மில்லியன் டொலர் சேமிப்பு: இலங்கையில் பிரமாண்ட திட்டம் ஆரம்பம்

  • September 18, 2026
  • 0 Comments

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது. 10.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளின் மின்சாரத் தேவையைப் […]

இந்திய அணியில் இடம்பெறுவதற்காக 15 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூரியவன்ஷி (Vaibhav Sooryavanshi) தனது வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?

  • September 18, 2026
  • 0 Comments

இந்திய அணியில் இடம்பெறுவதற்காக 15 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூரியவன்ஷி (Vaibhav Sooryavanshi) தனது வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றி முழுமையாகத் தொடரைக் கைப்பற்றியது. இத்தொடரில் சூரியவன்ஷிக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத்தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். […]

மத்திய கிழக்கு விவகாரத்தில் தென்கொரியா ராணுவ பலத்தை பயன்படுத்தாது எனவும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய மேலதிகப் பங்களிப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

மத்திய கிழக்கு போரில் தென் கொரியா பங்கேற்காது: ஜனாதிபதி திட்டவட்டம்

  • September 18, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு விவகாரத்தில் தென்கொரியா ராணுவ பலத்தை பயன்படுத்தாது எனவும், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய மேலதிகப் பங்களிப்பை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சோமாலியக் கடற்பரப்பில் தென் கொரியா தனது கடற்படையை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளது. எனினும், ஈரான் மீதான போரில் வொஷிங்டனுக்கு ஆதரவாகக் கூடுதல் இராணுவப் பங்களிப்பை வழங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி […]

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்குச் விஜயம் செய்த இலங்கைகான ஜப்பான் தூதுவர் அகிடோ இசமாதோ (Akito Isomato), இன்று பிற்பகல் 3.00 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். இலங்கை செய்தி

சீதையம்மனை தேடிச்சென்ற ஜப்பான் தூதுவர்

  • September 18, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்குச் விஜயம் செய்த இலங்கைகான ஜப்பான் தூதுவர் அகிடோ இசமாதோ (Akito Isomato), இன்று பிற்பகல் 3.00 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். ஆலயத்திற்கு வருகை தந்த தூதுவரை, ஆலய அறங்காவலர் சபையின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கிப் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்கேற்ற தூதுவருக்கு, ஆலயத்தின் சார்பில் உப பொருளாளர் […]

ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு ஆதரவாகவும் எதிரிகளுக்கு எதிராகவும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

“ஈரானுக்காக உயிரைத் தியாகம் செய்வோம்!” – வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்

  • September 18, 2026
  • 0 Comments

ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு ஆதரவாகவும் எதிரிகளுக்கு எதிராகவும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தத் தயார் என உறுதியேற்றுள்ள இந்த நடவடிக்கை, கடந்த பெப்ரவரி மாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய பேரணியாகப் பார்க்கப்படுகிறது. ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை மற்றும் புதிய பொருளாதாரத் தடைகளால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சரிவடைந்து வரும் சூழலில், மக்களை ஒன்றிணைக்கவும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தவும் ஈரான் அரசு இந்த பேரணியை முன்னெடுத்துள்ளது. […]

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தைப் பலவந்தமாக நிறைவேற்றிக்கொள்வதற்கு முற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையால், இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கம் ஏற்படும்,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டை பயன்படுத்த தவறிய இலங்கை

  • September 18, 2026
  • 0 Comments

“புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சிறப்பான வெளிவிவகாரக் கொள்கை இல்லை என்பது புலனாகிறது,” எனச் சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “ டெல்லியில் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நடைபெற்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா […]

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை செய்தி

அனோஜனைக் காப்பாற்ற ராஜதந்திர தலையீட்டைக் கோருகிறார் சாணக்கியன்

  • September 18, 2026
  • 0 Comments

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு , ” அனோஜன் ஆரம்பத்தில் சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால் பேஸ்புக் கருத்தொன்றுடன் தொடர்புபட்ட வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் […]

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும், முக்கிய தருணத்தில் அவர்கள் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கக்கூடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் கட்சி தாவும் படலம்: SJP எம்.பிக்கள் நாமல் பக்கம் தாவல்?

  • September 18, 2026
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றும், முக்கிய தருணத்தில் அவர்கள் தீர்க்கமான அரசியல் முடிவொன்றை எடுக்கக்கூடும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்: “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிச் சென்றவர்களில் ஓரிருவரைத் தவிர, ஏனையோரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். எனினும், தேவையற்றவர்கள் மற்றும் பிரச்சினைக்குரியவர்கள் எனக் […]

தீவிரமடைந்து வரும் 'எல் நினோ' காலநிலையால் இந்தியா கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வறட்சியான பருவமழையை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

எல் நினோ தாக்குதல்:வறட்சியின் பிடிக்குள் இந்தியா

  • September 18, 2026
  • 0 Comments

தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ காலநிலையால் இந்தியா கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வறட்சியான பருவமழையை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது பயிர் விளைச்சலைப் பாதிப்பதோடு உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் இதுவரை பதிவான சராசரி மழைப்பொழிவு, வழக்கமான அளவை விட 15% குறைவாக உள்ளது. இந்த பற்றாக்குறை தொடர்ந்தால், இயல்பை விட 18% மழைக்குறைவு […]