அனோஜனைக் காப்பாற்ற ராஜதந்திர தலையீட்டைக் கோருகிறார் சாணக்கியன்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு , ” அனோஜன் ஆரம்பத்தில் சவுதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தினால் பேஸ்புக் கருத்தொன்றுடன் தொடர்புபட்ட வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் […]













