செங்கடலில் பதற்ற நிலை: இந்தியா கடும் கவலை
செங்கடல் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் மற்றும் சர்வதேசக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியா கடும் கவலை வெளியிட்டுள்ளது.
பிராந்திய பாதுகாப்பையும், சர்வதேசக் கடல்வழிப் பாதைகளில் கப்பல்கள் சுதந்திரமாகப் பயணிப்பதையும் அச்சுறுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வெளியுறவு அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இத்தகவலை வெளியிட்டார்.
செங்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியக் கடல்வழிப் பாதைகள் வழியே நடைபெறும் சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தியா இதன்போது வலியுறுத்தியுள்ளது.
வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உலகளாவிய வர்த்தகத்தையும் பிராந்திய அமைதியையும் கடுமையாகப் பாதிப்பதாக இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.




