உலகம்

ஹூதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு ஈரானிடம் கோரிக்கை

ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் நிறுத்துமாறு ஈரான் நாட்டை G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இச்செயல் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை குலைக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஏமனிலும் சவுதி அரேபியா மீதும் ஹூதிகள் தொடர்ந்து நடத்தி வரும் ஏற்றுக்கொள்ள முடியாத தாக்குதல்களை நாங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.”  என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும், பொதுமக்களின் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறும், நல்லெண்ணத்துடன் அரசியல் தீர்வு காணும் முயற்சிகளில் மீண்டும் ஈடுபடுமாறும் ஹூதிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்