சீதையம்மனை தேடிச்சென்ற ஜப்பான் தூதுவர்
வரலாற்றுச் சிறப்புமிக்க நுவரெலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்குச் விஜயம் செய்த இலங்கைகான ஜப்பான் தூதுவர் அகிடோ இசமாதோ (Akito Isomato), இன்று பிற்பகல் 3.00 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
ஆலயத்திற்கு வருகை தந்த தூதுவரை, ஆலய அறங்காவலர் சபையின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கிப் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் பங்கேற்ற தூதுவருக்கு, ஆலயத்தின் சார்பில் உப பொருளாளர் ஆர். குணசேகரனால் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆலயத்தின் சிறப்பு விருந்தினர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் ஜப்பான் தூதுவர் தனது வருகை குறித்த பதிவைப் பதிவு செய்தார். மேலும், ஆலயத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ள முப்பரிமாண (3D) ‘புஷ்பக விமான’க் காட்சிகளையும் அவர் பார்வையிட்டார்.




