ஆஸ்திரேலியா செய்தி

எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஆஸ்திரேலியா தீவிரம்!

  • April 2, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese, எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். ஆஸ்திரேலியாவின் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத் தேவைகளில் பெரும்பகுதி சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இரு நாடுகளும் தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய உறுதிபூண்டுள்ளன. இது தொடர்பாக இரு […]

உலகம் செய்தி

ஈரான் போரில் தலையிடோம்: ஐரோப்பிய தலைவர்கள் திட்டவட்டம்!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரான் போர் விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று ஐரோப்பிய தலைவர்கள் European leaders தெரிவித்துள்ளனர். நேட்டோ NATO அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். இந்நிலையிலேயே ஐரோப்பிய தலைவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். அதேவேளை, ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்புத் தேவைகளுக்கு அமெரிக்காவை பெரிதும் நம்பியுள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் […]

விளையாட்டு

மீண்டும் கலைந்தது இத்தாலி அணியின் உலகக்கிண்ண கனவு!

  • April 1, 2026
  • 0 Comments

இத்தாலி கால்பந்து அணி உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெறும் வாய்ப்பை மூன்றாவது முறை இழந்துள்ளது. 4 தடவைகள் உலகக் கோப்பையை வென்ற பலமான அணியாக இருந்தும், தரவரிசையில் பின் தங்கியுள்ள போஸ்னியா மற்றும் ஹெர்ஸெகோவினாவிடம் தங்கியுள்ள தோல்வியுற்றது அந்நாட்டு ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறத் தவறியது இத்தாலிய கால்பந்து வரலாற்றில் ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டி எதிர்வரும் ஜூன் 11 […]

ஆஸ்திரேலியா செய்தி

“போர் தாக்கம் தொடரும்: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துக”

  • April 1, 2026
  • 0 Comments

பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் நாட்டு மக்களிடையே இன்று (01) உரையாற்றினார். இந்தப் பொருளாதார நெருக்கடியானது வரும் மாதங்களிலும் தொடரும் என்பதால், பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க அரசு எடுத்துள்ள பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை கோரினார் ஈரான் ஜனாதிபதி: ட்ரம்ப் தகவல்!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய தலைமை முந்தைய ஆட்சியாளர்களை விட அதிக அறிவுத்திறன் கொண்டதாகவும், தீவிரப்போக்கு குறைந்ததாகவும் இருப்பதாக ட்ரம்ப் வர்ணித்துள்ளார். எனினும், ஈரானுக்கு அருகிலுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்யும் வரை இந்த கோரிக்கை ஏற்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஈரான் மீது கடுமையான ராணுவத் தாக்குதல்கள் தொடரும் என்று […]

இலங்கை செய்தி

கணித, உயிரியல் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலிடம்!

  • April 1, 2026
  • 0 Comments

வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் மாவட்ட மட்டத்தில் கணித மற்றும் உயிரியல் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலிடங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். கணிதப் பிரிவில் அனுராகந்தன் விஸ்வகாந்தன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 12 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். அதேவேளை உயிரியல் பிரிவில் சந்திரபாலா கதுசன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 20 […]

இலங்கை செய்தி

யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 A சித்தி!

  • April 1, 2026
  • 0 Comments

வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். கணிதப் பிரிவில் 42 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 16 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும், 6 மாணவர்கள் ஏ, 2 பி சித்திகளையும் பெற்றுள்ளனர். உயிரியல் பிரிவில் 19 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 12 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும், 8 மாணவர்கள் ஏ, […]

உலகம் செய்தி

நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா?

  • April 1, 2026
  • 0 Comments

நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தீவிரமாக ஆலோசித்துவருகின்றார் என தெரியவருகின்றது. ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் போதிய ஆதரவை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும் ட்ரம்ப், அந்த அமைப்பை ஒரு வலிமையற்ற கட்டமைப்பு என்று விமர்சித்துவருகின்றார். குறிப்பாக, ஈரான் மற்றும் உக்ரைன் விவகாரங்களில் அமெரிக்காவிற்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா மற்ற நாடுகளுக்குத் தானாகவே முன்வந்து உதவிய போதிலும், நேட்டோ […]

இந்தியா செய்தி

தேயிலை தொழிலாளர்களை கௌரவித்த பிரதமர் மோடி!

  • April 1, 2026
  • 0 Comments

இந்தியா, அசாமின் திப்ருகரில் அமைந்துள்ள தேயிலை தோட்டமொன்றுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அவர் அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன், மாநிலத்தின் தேயிலைத் துறைக்கு தொழிலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக எதிர்வரும் ஏப்ரல் 9-ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் திகதி நடைபெற உள்ளது. அசாமில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அசாம் கனபரிஷத், போடோலாந்து மக்கள் […]

விளையாட்டு

IPL – இன்றைய ஆட்டம் தொடர்பான அறிவித்தல்!

  • April 1, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று (31) Lucknow Super Giants – Delhi Capitals அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி அக்சர் படேல் தலைமையில் போட்டியில் பங்கேற்கின்றது.