இலங்கையில் டெங்கு அபாயம் இன்னும் தணியவில்லை
இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 10 நாட்களில் மாத்திரம் 11,764 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 67,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயினால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 35,427 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவக்கூடிய பகுதிகளாக 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.




