செய்தி

மொரட்டுவவில் முச்சக்கர வண்டி ஓட்டுநரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

  • September 9, 2026
  • 0 Comments

மொரட்டுவை, ரவத்தவத்தை பகுதியிலுள்ள இம்மானுவேல் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் எவ்விதப் பாதிப்புமின்றி தப்பியதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் மொரட்டுவை மாநகர சபையில் பணிபுரியும் அங்குலானை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். […]

இலங்கை

கொஸ்கொடவில் துப்பாக்கிச்சூடு

  • September 6, 2026
  • 0 Comments

கொஸ்கொட பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கொஸ்கொட தாரகா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் ஒருவரைக் குறிவைத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மி.மீ. துப்பாக்கியைக் கொண்டு இருமுறை சுட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் இரு முறையும் துப்பாக்கி வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா முக்கிய செய்திகள்

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு – பெண் பலி, தாக்குதல்தாரிக்கு வலைவீச்சு

  • August 30, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் ஆரவ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்  ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளனர். ஆராவ் நகரில் உள்ள  குதிரைப்பந்தைய மைதானத்தில் இந்த இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 22 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 24 முதல் 27 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்தாரி தப்பியோடியுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேநேரம் தாக்குதலுக்கான சூழ்நிலை மற்றும் பின்னணியை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக […]

இலங்கை

ஹோமாகமவில் துப்பாக்கிச்சூடு

  • August 17, 2026
  • 0 Comments

ஹோமகமவின் ஹபரகடா பகுதியில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணத்தை அறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – நபர் ஒருவர் உயிரிழப்பு

  • July 25, 2026
  • 0 Comments

பெல்லன்வில பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் படுகாயம் அடைந்த நிலையில், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆழமான காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இலங்கையில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 14 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

  • July 23, 2026
  • 0 Comments

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

உலகம்

அரிசோனாவில் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் படுகாயம்

  • July 20, 2026
  • 0 Comments

அரிசோனாவின் (Arizona)  டக்சன் (Tucson) நகரின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள வணிகப் பகுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் சந்தேகநபர் உட்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில், பொலிஸ் அதிகாரிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது தாக்குதல்தாரியை எதிர்கொண்ட பொலிஸார் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது […]

இலங்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

  • July 19, 2026
  • 0 Comments

இந்த ஆண்டு இதுவரை 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பிலியந்தல மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மொத்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உலகம்

டொரண்டோவில் விழாவொன்றில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

  • July 12, 2026
  • 0 Comments

டொரண்டோவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லத்தீன் அமெரிக்க கலாச்சார விழா ஒன்று நடைபெற்று வந்த நிலையில், செயின்ட் கிளேர் அவென்யூ ( St Clair Avenue ) வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ (West and Arlington Avenue) அருகே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

உலகம்

கனடாவில் யூதர்கள் செறிந்து வாழும் பகுதியில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!

  • June 23, 2026
  • 0 Comments

கனடாவின் மொன்டிரியலில் திங்கட் கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். பெருமளவான யூதர்கள் வசிக்கும் பகுதியில் மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பொதுமகன் மற்றும் தாக்குதல்தாரி உள்ளட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்சிச்சூட்டுக்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும் பிரெஞ்சு மொழி பொது ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ கனடா, தாக்குதல்தாரியை “இன்செல்” சித்தாந்தத்துடன் தொடர்புடையவர் விவரித்துள்ளது. இன்செல் என்பதன் பொருள் “விருப்பமின்றி பிரம்மச்சரியத்தை […]