உலகம்

டொரண்டோவில் விழாவொன்றில் துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு

டொரண்டோவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நால்வர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்க கலாச்சார விழா ஒன்று நடைபெற்று வந்த நிலையில், செயின்ட் கிளேர் அவென்யூ ( St Clair Avenue ) வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ (West and Arlington Avenue) அருகே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இறந்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும் வரை, அப்பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் முதலில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டவில்லை. அவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்