கொழும்பின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் வைத்தியசாலையில்
வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.




