கனடாவில் யூதர்கள் செறிந்து வாழும் பகுதியில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!
கனடாவின் மொன்டிரியலில் திங்கட் கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பெருமளவான யூதர்கள் வசிக்கும் பகுதியில் மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பொதுமகன் மற்றும் தாக்குதல்தாரி உள்ளட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்சிச்சூட்டுக்கான காரணத்தை பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும் பிரெஞ்சு மொழி பொது ஒலிபரப்பு நிறுவனமான ரேடியோ கனடா, தாக்குதல்தாரியை “இன்செல்” சித்தாந்தத்துடன் தொடர்புடையவர் விவரித்துள்ளது.
இன்செல் என்பதன் பொருள் “விருப்பமின்றி பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதாகும்.





