சிறைக் கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்
நீர்கொழும்பு சிறையிலிருந்து மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளிக் காட்சி தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய நாளை (13.07) முதல் நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டிய கைதிகள் காணொளிக் காட்சி இணைப்புகள் மூலம் இணைக்கப்படுவார்கள் என்று குறித்த திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் ஆணையர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார். நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த மோதலைத் தொடர்ந்து, கைதிகள் மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மாற்றப்பட்ட கைதிகளை அவர்களது வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வது […]




