எழுச்சி பாடல்: கிளிநொச்சி சொல்லிசை கலைஞருக்கு விளக்கமறியல்!
எழுச்சி பாடல்களைப் பாடி, சமூக ஊடங்களில் பதிவிட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக அவர்மீது காவல்துறையால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில், கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான சங்கீதன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார். அதனையடுத்து, இசை நிகழ்வில் தான் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி […]













