செய்தி விளையாட்டு

2026 FIFA World cup: ஈரான் வீரர்களுக்கு கிடைத்தது விசா!

2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக, ஈரானிய தேசிய அணி வீரர்களுக்கும் , ஊழியர்களுக்கும் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மெக்சிகோ விசா வழங்கியுள்ளதை, துருக்கிக்கான ஈரான் தூதுவர் Mohammad-Hassan Habibollahzadeh உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடனான போர் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, ஈரான் தனது பயிற்சி முகாமினை அரிசோனாவிலிருந்து மெக்சிகோ எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்கு மாற்றியுள்ளது.

இந்த இடமாற்றத்திற்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA ஒப்புதல் அளித்துள்ளது.

ஈரான் தனது குழுநிலை ஆட்டங்களை அமெரிக்காவில் விளையாட வேண்டியிருந்தாலும், அங்கேயே தங்குவதைத் தவிர்த்து மெக்சிகோவை ஒரு பாதுகாப்பான தளமாக தேர்ந்தெடுத்துள்ளது.

ஈரான் தனது குழு மட்டத்திலான மூன்று போட்டிகளையும் அமெரிக்காவில் விளையாடவுள்ளதுடன், மெக்சிகோவில் இருந்தே அங்கு சென்றுவர திட்டமிட்டுள்ளது.

FIFA உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. எதிர்வரும் 11 ஆம் திகதி உலகக்கிண்ண தொடர் ஆரம்பமாகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!