இலங்கை செய்தி

குவைத் விமான நிலையம்மீது தாக்குதல்: மூன்று இலங்கையர்கள் காயம்!

குவைத் சர்வதேச விமான நிலையம்மீது ஈரான் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளனர்.

குவைத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மூன்று இலங்கையர்களும் அங்கு மின்தூக்கி பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணியாற்றிவந்துள்ளனர் என தெரியவருகின்றது.

ஈரான் நேற்று நடத்திய மேற்படி தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 63 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!