இலங்கை செய்தி

எழுச்சி பாடல்: கிளிநொச்சி சொல்லிசை கலைஞருக்கு விளக்கமறியல்!

எழுச்சி பாடல்களைப் பாடி, சமூக ஊடங்களில் பதிவிட்ட  கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக அவர்மீது காவல்துறையால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில்,  கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான சங்கீதன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார்.

அதனையடுத்து, இசை நிகழ்வில்  தான் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பாடல்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவிய நிலையில்,  குறித்த காணொளி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர்  நேற்று முன்தினம் குறித்த இளைஞனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, சாவகச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதனையடுத்து சாவகச்சேரி காவல்துறையினர்  குறித்த  இளைஞனை நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முற்படுகிறார் என அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து, அவரை  எதிர்வரும் 17ஆம்திகதிவரை விளக்கமறியில் வைக்க அனுமதி கோரினர்.

இதையடுத்து சாவகச்சேரி நீதிமன்றம் குறித்த பாடகரை   விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!