ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் மேலும் ஐந்து உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும்

  • May 9, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களின் அனைத்து முடிவுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில், 136 உள்ளூராட்சிகளில் 131 பகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இன்னும் வெளியாக வேண்டியுள்ள ஐந்து உள்ளூராட்சிகளின் முடிவுகள் பிராட்போர்டு, க்ராய்டன், லேம்பெத், லூயிஷாம் மற்றும் டவர் ஹாம்லெட்ஸ் பகுதிகளுக்கானவையாகும். இந்த முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

புதிய ஆலோசகர்களாக கோர்டன் பிரவுன், ஹாரியட் ஹார்மன் நியமனம்

  • May 9, 2026
  • 0 Comments

ஹாரியட் ஹார்மன் மற்றும் கோர்டன் பிரவுன் ஆகியோரை புதிய ஆலோசகர் பதவிகளில் நியமிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் ஸ்டார்மர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் மீள்திறனை வலுப்படுத்த சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட கோர்டன் பிரவுன் மிகவும் தகுதியானவர் என்று அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டார். அதேவேளை, ஹாரியட் ஹார்மனை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வலுவான ஆதரவாளர் என பாராட்டிய ஸ்டார்மர், கட்டமைப்பு ரீதியான பெண்வெறுப்பை எதிர்கொள்ள அவருடன் இணைந்து பணியாற்றுவதாகவும் […]

ஐரோப்பா செய்தி

ஃபரேஜை நம்பர் 10 க்கு கொண்டு வர தயாராகும் டோரிகள் – லிபரல் டெமாக்ரட்ஸ் குற்றச்சாட்டு

  • May 6, 2026
  • 0 Comments

கன்சர்வேடிவ் தலைவர் Kemi Badenoch மீது லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கடும் விமர்சனம் முன்வைத்துள்ளது. உள்ளூர் தேர்தல்களில் கன்சர்வேடிவ் கவுன்சிலர்கள் Reform UK கட்சியுடன் ஒப்பந்தங்கள் அல்லது இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா என Sky News  நேர்காணலில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கன்சர்வேடிவ் கொள்கைகளை செயல்படுத்த உதவும் எவருடனும் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என பதிலளித்தார். இந்த பதிலைத் தொடர்ந்து, லிபரல் டெமாக்ரட்ஸ் துணைத் தலைவர் Daisy Cooper கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் கவுன்சில் தேர்தல் முடிவுகள் முக்கிய இடம் பெறும் – நிபுணரின் விளக்கம்

  • May 6, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் இரவு நேர வாக்கு எண்ணிக்கை இடம்பெறாத காரணத்தினால், எதிர்வரும் 08 ஆம் திகதி  காலை வெளியாகும் செய்திகளில் இங்கிலாந்தின் கவுன்சில் தேர்தல் முடிவுகள் முக்கிய இடம் பெறும் என தேர்தல் ஆய்வாளர் மைக்கேல் த்ராஷர் ( Michael Thrasher) தெரிவித்துள்ளார். 2025 மே மாத கவுண்டி கவுன்சில் தேர்தல்களை முன்னிட்டு, முக்கிய கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும் இட இழப்புகளை சந்திக்கக்கூடும் என்ற நிலை நீடிக்கிறது. 2021 மற்றும் 2022 […]

ஐரோப்பா செய்தி

செஞ்சிலுவைச் சங்க’ தொடர்பாளர் என கூறியது தவறு – பசுமைக் கட்சித் தலைவர்

  • May 6, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் என தன்னை விபரித்தது “தவறான வார்த்தைப் பயன்பாடு”  என பசுமைக் கட்சித் தலைவர் Zack Polanski ஒப்புக்கொண்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு துணைத் தலைவராக போட்டியிடும் போது நிதி திரட்டிய நிகழ்ச்சிகளில், அவர் British Red Cross அமைப்பின்  செய்தித் தொடர்பாளர் என கூறியதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டது. ஆனால் அந்த தொண்டு நிறுவனம் இந்தக் கூற்றை மறுத்தது. இதுகுறித்து BBC யின் ‘Today’ நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவித்த […]

ஐரோப்பா செய்தி

புகலிடம் பெற ஓரினச் சேர்க்கையாளர்களாக நடிப்பு – இருவர் கைது

  • May 6, 2026
  • 0 Comments

புகலிடம் பெறும் நோக்கில் தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என உருவகப்படுத்திக்கொள்ள உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு ஆலோசகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன கிழக்கு லண்டனில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சோதனைகளை, உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு அமுலாக்கக் குழுவின் குற்றவியல் மற்றும் நிதி புலனாய்வு பிரிவு முன்னெடுத்தது. விசா காலம் நிறைவடையும் நிலையில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு, புகலிட மனுக்களுக்கு ஆதரவாக போலியான கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கடந்த மாதம் பிபிசியின் இரகசிய விசாரணையில் […]

உலகம் செய்தி

ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

  • May 5, 2026
  • 0 Comments

ஈரான் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாம் வெற்றி பெற விரும்புவதால், ஈரானின் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாகவும், நிதித்துறைச் செயலாளர் Scott Bessent இதுவரை இல்லாத அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும், ஈரானின் நாணய மதிப்பு மிகவும் குறைந்துவிட்டதாகவும், பணவீக்கம் சுமார் 150% வரை இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். […]

உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன் பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சு வார்த்தை

  • May 5, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது முக்கியமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வது குறித்து உரையாடல் இடம்பெறும் என அவர் தெரிவித்தார். இந்த முக்கிய நீர்வழியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உலகம் செய்தி

ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை

  • May 5, 2026
  • 0 Comments

வர்த்தகக் கப்பல்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டால், அமெரிக்கா “அளவற்ற ஆயுத பலத்தை” பயன்படுத்தி பதிலடி கொடுக்கும் என அமெரிக்க பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய கடற்படை நடவடிக்கையான “ஆபரேஷன் ப்ராஜெக்ட் ஃப்ரீடம்” மூலம் இந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். “அமெரிக்காவிலிருந்து உலகிற்கு ஒரு பாதுகாப்பு உறுதி வழங்கப்பட்டுள்ளது” என்றும் […]

இலங்கை செய்தி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எயார்பஸ் விவகாரம் – கபில சந்திரசேனவுக்கு பிணை

  • May 5, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை  பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதவான் தடை விதித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு […]