ஐரோப்பா

பாலஸ்தீன அமைப்பு மீதான தடை – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய அனுமதி

பிரித்தானியாவில் பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன நடவடிக்கை அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் இந்தத் தடையை உறுதி செய்தது.

இருப்பினும் பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பின் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த இந்தத் தடை, பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பில் உறுப்பினராக இருப்பதையோ அல்லது அதற்கு ஆதரவளிப்பதையோ குற்றமாக்குகிறது. இதற்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

​​தலைமை நீதிபதி பரோனஸ் கார் ( Baroness Carr) இந்தத் தடை “தனிநபர் உரிமைகளில் ஒரு நியாயமான மற்றும் விகிதாசாரத் தலையீடு” என்றும், அந்த அமைப்பு “பயங்கரவாதத்திற்கு நிகரான சட்டவிரோத வன்முறையை வெளிப்படையாக ஊக்குவிக்கிறது” என்று கூறி  தடையை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்