சூயஸ் கால்வாயில் பற்றி எரியும் கப்பல்கள்
எகிப்தின் சூயஸ் கால்வாய்க்கு அருகிலுள்ள டாமியெட்டா (Damietta) மத்திய தரைக்கடல் துறைமுகத்தில், இரண்டு எரிவாயு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
குறித்த கப்பல்கள் ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக தீப்பிடித்து எரிவதாக எகிப்திய அமைச்சரவை உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்குச் சொந்தமான ‘எனெர்கோஸ் வின்டர்’ கப்பலில் முதலில் பரவிய தீ பிறகு மற்ற கப்பலையும் பாதித்துள்ளது.
இந்தத் தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாலும், அதைத் தொடர்ந்து ஈராக்கில் ஈரான் ஆதரவுக் குழுக்கள் மீது வாஷிங்டனும் சவூதி அரேபியாவும் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும் மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குறித்த நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




