ஈரான் ஜனாதிபதியுடன் பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சு வார்த்தை
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது முக்கியமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வது குறித்து உரையாடல் இடம்பெறும் என அவர் தெரிவித்தார்.
இந்த முக்கிய நீர்வழியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





