இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் இரு துருவங்கள் ஒரே வரிசையில்!

  • May 11, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் 1967-ல் திமுக-வும், 1977-ல் அதிமுக-வும் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றன. அன்று முதல் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு கட்சிகளும் மாறி மாறி ஆளுங்கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியாகவும் மட்டுமே இருந்து வந்துள்ளன. எனினும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசியல் சூழலில் இன்று இந்த இரு கட்சிகளும் எதிர்க்கட்சியாக, ஒரே வரிசையில் அமரும் நிலை […]

ஆஸ்திரேலியா செய்தி

ஹண்டாவைரஸ்: ஆஸ்திரேலிய பிரஜைகளை மீட்க சிறப்பு விமானம்!

  • May 11, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசாங்கம் MV Hondius எனும் சொகுசு கப்பலில் சிக்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளை மீட்பதற்கான சிறப்பு விமான ஏற்பாடுகளை செய்துள்ளது. மேற்படி கப்பலில் பரவி வரும் ஆபத்தான ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்று காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதோடு, பலருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்கப்படுபவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் குடிமக்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. […]

இலங்கை செய்தி

சிசு மரணம்: திருகோணமலையில் இரு வைத்தியர்கள் பணி நீக்கம்!

  • May 11, 2026
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பணி புறக்கணிப்பின்போது, சிசுவொன்று மரணித்தமை தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. விசேட மகப்பேறு வைத்தியர் மற்றும் சிரேஷ்ட பெண் வைத்தியர் ஆகியோரினது சேவையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிசுவின் நிலை மோசமடைந்து வருவதாக வாட்டுக்கு பொறுப்பான வைத்தியர் 6 முறை தொலைபேசி மூலம் அழைத்தும், சம்பந்தப்பட்ட விசேட வைத்தியர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என விசாரணைகளில் உறுதி […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள்: விஜயிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

  • May 11, 2026
  • 0 Comments

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூரும் வகையில், மே 18 ஆம் திகதியை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு தமிழகத்தின் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முதலமைச்சர் விஜய்க்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- தமிழக சட்டசபைத் தேர்தலில் முதல் முயற்சியிலேயே பாரிய சாதனை படைத்து முதலமைச்சராகப் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு 12 கடல் கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியது ஆஸ்திரேலியா!

  • May 11, 2026
  • 0 Comments

இலங்கை கடலோரக் காவல்படைக்கு ஆஸ்ரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. மிரிஸ்ஸவில் உள்ள இலங்கை கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே ட்ரோன்கள் கையளிக்கப்பட்டுள்ளன. ஆஸ்ரேலியாவின் கடல் எல்லைக் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் பிரட் சோன்டர் , இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்பிடம் 12 கண்காணிப்பு ட்ரோன்களையும் முறைப்படி கையளித்துள்ளார். இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் மற்றும் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர். […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த One Nation கட்சி!

  • May 10, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Farrer தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பல தசாப்தங்களாக நிலவி வந்த கூட்டணி கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து One Nation கட்சி ஒரு வரலாற்றுச் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. Farrer தொகுதியில் One Nation கட்சி சார்பில் களமிறங்கிய David Farley பெற்ற வெற்றி, அக்கட்சி நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நேரடியாகப் பெறும் முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது. Farrer தொகுதியில் லிபரல் கட்சியின் வாக்குகள் பெருமளவில் சரிந்ததையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. […]

செய்தி விளையாட்டு

புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது குஜராத்!

  • May 10, 2026
  • 0 Comments

IPL 2026  தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 52-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைப் பெற்றது. 230 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , 16.3 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சகல […]

செய்தி விளையாட்டு

FIFA World Cup 2026: ஈரானால் 10 நிபந்தனைகள் முன்வைப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தமது நாடு பங்கேற்கும் என ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், வீரர்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை உறுதி செய்தல் உட்பட 10 முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது. குறிப்பாக, தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், விசா நடைமுறைகளில் சிக்கல் இருக்கக்கூடாது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. மேற்படி நிபந்தனைகள் ஏற்கப்படும்பட்சத்திலேயே மூன்று […]

இலங்கை செய்தி

யாழ். வைத்தியசாலையில் தீ விபத்து: எரிந்த பகுதி பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள்!

  • May 9, 2026
  • 0 Comments

யாழ். போதனா வைத்தியசாலையின் தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இன்று அனர்த்தம் இடம்பெற்ற பகுதியை நேரில் ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறினார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த அனர்த்தம் ஆரம்பமானது என்று தெரிவித்த அவர், தீ விபத்தின் பாதிப்புகள் […]

இலங்கை செய்தி

யாழ்.வைத்தியசாலை தீ விபத்து: பின்னணியில் சதியா?

  • May 9, 2026
  • 0 Comments

யாழ்.போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இன்று அதிகாலை தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். இந்த அனர்த்தம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அனர்த்தம் எமது மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இது […]