நெதர்லாந்து தூதுவருடன் சாணக்கியன் சந்திப்பு: தமிழர் பிரச்சினை குறித்து எடுத்துரைப்பு
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார். வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கிலான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மாத்திரமன்றி, தற்போதைய அரசின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சாணக்கியன், தூதுவரிடம் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மயிலத்தமடு – மாதவனை போன்ற பாரம்பரிய […]













