இஸ்ரேல் மீதான சைபர் தாக்குதல்களை அதிகரித்த ஈரான்
இந்த ஆண்டிலெ் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி இன்று அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து சைபர் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் தேசிய சைபர் இயக்குநரகத்தின் இயக்குனர் ஜெனரல் Yossi Karadi இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளின் போது, இஸ்ரேலின் அதிகாரிகள் 2025 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 1,600 சைபர் தாக்குதல் சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டிய அவர், 2026 ஆம் ஆண்டின் இந்த காலப்பகுதியில் 4,800 சைபர் தாக்குதல் சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில குழுக்கள் மிகவும் திறமையானவை” என்று கூறிய அவர், நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் முக்கியமான உள்கட்டமைப்பு, மத்திய நிறுவனங்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் அமைப்புகளுக்கு எதிராக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.





