செய்தி பொழுதுபோக்கு

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி,

“எங்களது அன்பிற்குரிய ஹைடனின் துயரமான மறைவை மிகுந்த மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அவர் ஒரு சிறந்த ஆளுமையாகவும், அவரை அறிந்தவர்களுக்கும், திரையில் அவரைக் கண்ட லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் அளப்பரிய அன்பையும் மகிழ்ச்சியையும் தந்தவராக விளங்கினார்” என்று தெரிவித்தார்.

ஹைடன் பேனெட்டியரின் மறைவு குறித்த மேலதிக விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

குழந்தைப் பருவத்திலேயே விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கிய ஹைடன், பின்னர் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ (Remember the Titans) போன்ற திரைப்படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாகப் புகழ்பெற்றார்.

என்.பி.சி (NBC) தொலைக்காட்சியின் ‘ஹீரோஸ்’ (Heroes) தொடரில் ‘கிளேர் பென்னட்’ எனும் முதன்மை வேடத்தில் நடித்து சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இவர், ‘நேஷ்வில்’ (Nashville) தொடரில் நாட்டுப்புறப் பாடகி ஜூலியட் பார்ன்ஸ் வேடத்தில் நடித்ததற்காக ‘கோல்டன் குளோப்’ (Golden Globe) விருதுப் பரிந்துரைகளையும் பெற்றார்.

சிறு வயது முதலே திரையுலகில் சந்தித்த சவால்கள் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசி வந்த இவர், ‘திஸ் ஈஸ் மீ: ஏ ரெக்கனிங்’ (This Is Me: A Reckoning) என்ற பெயரில் சுயசரிதை நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி